திருமணத்திற்கு முன்பே ஹனிமூன் சென்ற சாய் பல்லவியின் தங்கை – தீயாய் பரவும் புகைப்படங்கள்!

Author: Rajesh
11 February 2024, 3:16 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

இதனிடையே சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கு சில நாட்களுக்கு முன்பு காதலனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் தற்போது பூஜா கண்ணன் ஜப்பானில் உள்ள ஹொகாய்டோ தீவுக்கு சென்று அங்கு ஜாலியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்ஸ்… ” என்ன திருமணத்திற்கு முன்பே ஹனிமூனா? என கேள்வி எழுப்பி ட்ரோல் செய்துள்ளனர். பூஜா நிச்சயம் வருங்கால கணவரோடு தான் சென்றிருப்பார். ஜோடியா போட்டோ போடுங்க ஒன்னும் தப்பா எடுத்துக்கமாட்டோம் என கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!