விஷ்ணுவிடம் பூர்ணிமா செய்த கேவலமான செயல்- வீடியோ வெளியிட்டு திட்டிதீர்க்கும் ரசிகர்கள்..!

Author: Vignesh
27 December 2023, 11:49 am

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி என்பது நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது.

bigg boss 7 tamil-updatenews360

ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை. காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான். கடந்த சீசன்களை விட இந்த சீசன் வித்தியாசமாகும் டைட்டில் வின்னரை குறித்து 80 நாட்களை கடந்தும் யூகிக்க முடியாமல் இருப்பதாகவும், மக்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்த சீசனில் யார் டைட்டில் வாங்குவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இப்போது, போட்டியாளர்களுக்கு Ticket To Finale டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கடுமையாக பேட்டிகளை போட்டியாளர்களும் விளையாடி வருகிறார்கள். இந்த டாஸ்க்கில் ஜெயித்து Ticket To Finale டிக்கெட்டை யார் வாங்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்து வருகிறது. அதாவது, நேற்று நடைபெற்ற போட்டியில் விஷ்ணு ஜெயித்துவிட அதனை ஏற்க முடியாமல் பூர்ணிமா அவரை காரி துப்புகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர் நல்ல போட்டியாளர்களுக்கு இது அழகு இல்லை என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?