தளபதி65 படத்தில் பூவையார்? அதிர்ஷ்டம் யார விட்டது!

21 January 2021, 10:19 am
Quick Share


விஜய் நடிக்கும் தளபதி65 படத்தில் பூவையார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பூவையார். தனது கானா பாடல் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இந்நிகழ்ச்சியின் மூலமாக தளபதி விஜய் நடிப்பில் வந்த பிகில் படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் மூலமாக பாடல் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும், பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள வெறித்தனம் பாடலுக்கு விஜய்யுடன் டான்ஸ் ஆடியிருப்பார்.


பிகில் படத்தைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி வெளியான மாஸ்டர் படத்திலும் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். அதுவும், விஜய் மீது ஏறி உட்காந்திருப்பார். பூவையார் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை வியக்கும்படி அமைந்துள்ளது.


இந்த நிலையில், தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து பூவையார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிகில், மாஸ்டர் ஆகிய படங்களுக்குப் பிறகு தளபதி65 படத்தில் விஜய்யுடன் இணைந்து பூவையார் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, விஜய், தளபதி65 படத்தில் நடிக்கிறார். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தளபதி65 படத்தின் பூஜை நடக்க இருப்பதாகவும், 8 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும், வில்லனாக அருண் விஜய் அல்லது சியான் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 4

0

0