ஜிவி பிரகாஷ் உடன் கள்ளக்காதலா? சைந்தவிக்கு ஸ்கெட்ச்? பிரபல நடிகை பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2025, 7:59 pm

அடுத்தடுத்து பிரபலங்கள் கடந்த 2024ஆம் வருடம் விவாகரத்து பெற்றது, பிரிந்து வாழ்வது என முடிவெடுத்த செய்திகள் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்தது.

இதில் முக்கிய நட்சத்திர தம்பதிகள் ஜிவி பிரகாஷ் – சைந்தவி. இருவரும் கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் இசைக்கலைஞர்கள் என்பதால் எந்த வித எதிர்ப்பு இல்லாமல் திருமணம் நடந்தது.

இதையும் படியுங்க : 21 வருடங்களுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் ஆட்டோகிராஃப் : சிலிர்க்க வைத்த AI வீடியோ!

இருவருக்கும் பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த வருடம் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், எங்களின் தனிப்பட்ட முடிவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். இது ரசிகர்களை அதிர்ச்சியடை வைத்தது. இருப்பினும் இருவரும் இணைந்து கச்சேரிகளில் பாடி வருகின்றனர்.

இருவரும் பிரிந்ததற்கான காரணம் குறித்து இணையத்தில் பல தகவல்கள் பரவின. முக்கியமாக பேச்சுலர் படத்தில் நடித்த போது, ஜிவி பிரகாஷ்க்கும், திவ்ய பாரதிக்கும் ஏற்பட்ட நெருக்கம் தான் என பேசப்பட்டது.

Bachelor Divyabharathi

இந்த நிலையில் திவ்யபாரதி இது குறித்து ஓபனாக பேசியுள்ளார். ஜிவி பிரகாஷ் சாரும், சைந்தவி மேடமும் திடீரென பிரிந்தது வருத்தம் தான். ஆனால் இருவரும் கச்சேரியில் ஒன்றாக பாடியது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இனிமேல் நம்மை வைத்து யாரும் பேசமாட்டாங்க என நினைத்தேன். ஆனால் இப்போதுதான் அதிகமாக பேசுகிறார்கள்.

GV Prakash and Saindhavi Divorce

அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையை நான் கெடுத்துடேன், எனக்கும் ஜிவிக்கும் காதல் என பெண்களே என்னை திட்டி வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது எதுவுமே பதில் சொல்லக்கூடாது என கடந்து வந்துவிடுகிறேன் என ஓபனாக கூறியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!