தளபதி 68 படத்தில் இணைந்த பிரபல நடிகை… நாளுக்கு நாள் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

Author: Rajesh
4 January 2024, 1:45 pm

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் .இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். ஆம், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.

இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் சூப்பரான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, தளபதி 68 திரைப்படத்தில் பிரபல நடிகை பார்வதி நாயர் இணைந்துள்ளாராம். அவரின் ரோல் படத்தின் பல முக்கியமான காட்சிகள் கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு பெரிய அளவில் பேசப்படவில்லை. இதனால் தளபதி 68 திரைப்படம் மிகப்பெரிய காம்பேக் கொடுக்கும் என பார்வதி நாயர் எதிர்பார்த்திருக்கிறாராம்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!