முடிவுக்கு வரும் பிரபல சீரியல்.. ஆகஸ்ட் 23ஆம் தேதி கிளைமேக்ஸ் : வருத்தத்தில் ரசிகர்கள்..!!
Author: Udayachandran RadhaKrishnan16 August 2025, 11:53 am
இல்லத்தரசிகளை கட்டிப்போட்டுவது சீரியல்கள்தான். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர், கலர்ஸ் என அத்தனை சேனல்களிலும் சீரியல்களுக்கு பெரும் ரசிகர்கள் உண்டு.
குறிப்பாக கலைஞர் தொலைக்காட்சியில கௌரி மற்றும் மீனாட்சி சுந்தரம் சீரியல்களுக்கு மவுசு அதிகம். எஸ்வி சேகர் கதாநாயகனாக நடித்து வரும் மீனாட்சி சுந்தரம் சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம்.
வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து எஸ்வி சேகர் தனது குடும்பத்தை திருத்தும் ஒரு கதை. இந்த சீரியலுக்கு கொடுத்த பிரமோ அதிரிபுதிரியாக வைரலானது.
இதனால் இந்த சீரியலுக்கு மவுசு அதிகம் ஆன நிலையில், இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் இந்த சீரியல் ஒளிபரப்பான நிலையில் நடிகை ஷோபனா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி கிளைமேக்ஸ் உடன் இந்த சீரியல் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 மாதங்களில் சீரியல் முடிவுக்கு வருவது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
