அரசியல் தலைவர்களோடு ஒப்பிட்டு போஸ்டர் அச்சிடக்கூடாது : ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2021, 3:55 pm
Vijay FAns Warn -Updatenews360
Quick Share

அரசியல் தலைவர்களின் உருவ தோற்றத்தில் தளபதி விஜய்யை சித்தரித்து சுவரொட்டிகள் வெளியிடுவது வருத்தம் அளிக்கிறது.

சமீப காலமாக அரசியல் தலைவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்து வருகின்றன. இந்த நிலையில், அரசியல் தலைவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு போஸ்டர்கள் அடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், சமீப காலமாக, இயக்க தோழர்கள் ஒரு சிலர் ஆர்வ மிகுதியால் / ஆர்வகோளாரால் நமது தளபதி அவர்களை, பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை நமது தளபதி அவர்களுடைய படங்களோடு இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தையும் உள்ளடக்கி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது.

ரசிகர்கள், இயக்க தோழர்களின் இச்செயல்களை அவ்வப்போது தளபதி அவர்களின் அனுமதியின் பேரில் கண்டித்துள்ளேன். இயக்க தோழர்கள் இது போன்ற செயலில் யாரும் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தியுள்ளேன். இருப்பினும் இப்படி தொடர்வது வருத்தத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், இது போன்ற செயல்களை நமது தளபதி அவர்கள் என்றும் விரும்புவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, இப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் தொடரும் பட்சத்தில், தளபதி அவர்களின் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தளபதி அவர்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 189

1

0