தீர விசாரிப்பதே மெய்.. கமல்ஹாசனுக்கே கருத்து சொன்ன பிரதீப்.. பிறந்தநாள் அதுவுமா இப்படி சொல்லிட்டாரே?!!

Author: Vignesh
7 November 2023, 1:45 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

bigg boss 7 tamil-updatenews360

இதனிடையே, கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 2 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. பிரதீப் தரப்பு நியாயத்தை தெரிவிக்க கமல் ஏன் அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது, இன்று அவரது பிறந்த நாள் என்பதை கூட நெட்டிஷன்கள் நினைக்காமல் கமலஹாசனை கழுவி ஊற்றிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன்கள் தான் அப்படி என்றால் பொதுமக்களும் கமல்ஹாசனை கடுமையாக திட்டி வருகிறார்கள்.

இன்று உலக நாயகன் கமலஹாசன் பிறந்தநாளுக்கு பிரதீப் ஆண்டனியும் ஒரு வீடியோவை போட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது வசூல்ராஜா படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி போட்டு கமலுக்கு வாழ்த்து செய்தார். மேலும், தீர விசாரிப்பதே மெய் என்று ஹேஷ்டேக் போட்டு உள்ளார் பிரதீப். தற்போது இந்த ஹேஷ்டேக் தான் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பிரதீப் ரசிகர்கள் அவர் தக் லைப் செய்துவிட்டதாக கூறி வருகின்றனர்.

  • paresh rawal drank urine for leg injury ச்சீ இப்படி ஒரு வைத்தியமா? காயத்திற்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை தானே குடித்த சூர்யா பட நடிகர்!