பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை? ஒரே நாளில் வெளியாகும் இரண்டு திரைப்படங்கள்! அடேங்கப்பா…

Author: Prasad
22 August 2025, 1:57 pm

டிரெண்டிங் நடிகர்

“லவ் டூடே” திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மத்தியில் மிகப் பிரபலமாக வலம் வருபவர்தான் பிரதீப் ரங்கநாதன்.  “லவ் டூடே” திரைப்படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து அவர் நடித்த “டிராகன்” திரைப்படம் வேற லெவலில் பாராட்டை பெற்றது. “டிராகன்” திரைப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் “LIK”, “Dude” போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். 

இதில் “LIK” திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு  ஜோடியாக கிரீத்தி ஷெட்டி நடித்துள்ளார். “Dude” திரைப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். 

Pradeep ranganathan dude and lik released same day on diwali

தீபாவளிக்கு இரண்டு திரைப்படங்கள்!

பிரதீப் ரங்கநாதனின் “LIK” திரைப்படம் வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் தற்போது “Dude” திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. “Dude” திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் “Dude” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் இரண்டு திரைப்படங்கள் வெளிவரவுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!