தீபாவளியை தவறவிட்ட பிரதீப் ரங்கநாதனின் திரைப்படம்! அப்போ அந்த இன்னொரு படம்?
Author: Prasad9 September 2025, 5:18 pm
ஒரே நாளில் இரண்டு திரைப்படங்கள்
பிரதீப் ரங்கநாதனின் “லவ் இன்சுரன்ஸ் கம்பெனி”, “Dude” ஆகிய இரண்டு திரைப்படங்களும் தீபாவளியை முன்னிட்டு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் “லவ் இன்சுரன்ஸ் கம்பெனி” திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். நயன்தாரா இத்திரைப்படத்தை தயாரித்துள்ள நிலையில் அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதே வேளையில் “Dude” திரைப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது.
ரெண்டுல ஒன்னு அவுட்
இந்த நிலையில் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட பிரதீப் ரங்கநாதனின் இரண்டு திரைப்படங்களில் ஒரு திரைப்படம் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த “லவ் இன்சுரன்ஸ் கம்பெனி” திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து விலகுகிறதாம். இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமம் இன்னும் வியாபாரமாகவில்லையாம். இதன் காரணமாக பிரதீப் ரங்கநாதனின் “லவ் இன்சுரன்ஸ் கம்பெனி” தீபாவளிக்கு வெளியாகாது என கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் கீர்த்தீஸ்வரன் இயக்கிய “Dude” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறதாம். ஒரு ஹீரோவுக்கு ஒரே நாளில் இரண்டு திரைப்படங்கள் வெளிவரும் வழக்கம் எல்லாம் 1980களிலேயே வழக்கொழிந்துவிட்டது. அந்த வகையில் அந்த டிரெண்டை பிரதீப் ரங்கநாதன் மீண்டும் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் “லவ் இன்சுரன்ஸ் கம்பெனி” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக தகவல் வருகிறது.
