விஜய் முகத்துல இனி எப்படி முழிக்க முடியும்? ஜனநாயகன் படப்பிடிப்பில் பிரகாஷ் ராஜிற்கு வந்த சங்கடம்!

Author: Prasad
7 May 2025, 7:04 pm

விஜய்க்கு ஒன்னும் தெரியாது

தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணத்தை விஜய் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

விஜய்யை குறித்து பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பிரபலங்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியபோது, பவன் கல்யாணையும் விஜய்யையும் ஒப்பிட்டு இருவருக்கும் போதிய அரசியல் தெளிவு இல்லை என விமர்சித்து இருந்தார். பிரகாஷ் ராஜின் இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆனது. 

ஜனநாயகனில் பிரகாஷ் ராஜ்

இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆன நிலையில் ரசிகர்கள் பலரும், “பிரகாஷ் ராஜிற்கு ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கவில்லை என்ற காரணத்தால்தான் அவர் இவ்வாறு பேசுகிறார்” என்று விமர்சித்து வந்தனர். ஆனால் பிரகாஷ் ராஜ் “ஜனநாயகன்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய்யும் பிரகாஷ் ராஜும் இணைந்து நடிக்கும் காட்சிகள் இன்று முதல் படமாக்கப்பட உள்ளதாம். 

பிரகாஷ் ராஜ் பேசிய கருத்து எப்படியும் விஜய் காதுகளுக்கு சென்றிருக்கும். ஆதலால் பிரகாஷ் ராஜுக்கும் விஜய்க்கும் இடையே படப்பிடிப்பு தளத்தில் மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!