வாழ்க்கை ஒரு வட்டம் சார்… 18 வயது காதலியுடன் காதலர் தினத்தை கொண்டாடிய 40 வயது வாரிசு நடிகர்..!

Author: Vignesh
14 February 2023, 6:30 pm
Quick Share

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களது மகனும் பிரபல நடிகருமான பிரேம்ஜி நிறைய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிம்பு மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், இதனைத் தொடர்ந்து, சென்னை 600 028, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலம் அடைந்தார்.

‘வாழ்க்கை ஒரு வட்டம் சார்’, ‘என்ன கொடுமை சார் இது? , எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ண மாட்டோமா?’ உள்ளிட்ட டயலாக்குகள் மூலம் இவர் பேமஸ். திரைப்படங்கள், வெப் சீரீஸ் உள்ளிட்டவைகளில் நடித்து வரும் இவர், சில பாடல்களும் பாடியுள்ளார். இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவருக்கு வயது 40-ஐ கடந்த விட்ட போதிலும், இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார்.

பேட்டிகளிலும் திருமணம் நடக்கும் போது நடக்கும் என கூலாக பதிலளித்து வருகிறார் பிரேம்ஜி. இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி அமரன் அவ்வப்போது, நடிகைகள் போட்டும் ஹாட் புகைப்படங்களுக்கு ஹார்ட்டின் விட்டு ரியாக்ஷன் கொடுத்து நெட்டிசன்களை வெறுப்படைய செய்வார்.

அந்தவகையில் தற்போது காதலர் தினமான இன்று, மது பாட்டில்களை வைத்து, ஹாப்பி Valentines Day, எனக்கு தெரியும் உனக்கு 18 வயதாகிறது எனவும், இன்னைக்கு நான் உன்னை சாப்பிடாமல் விடமாட்டேன் என்றும், கூறி வீடியோவை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Views: - 1019

21

15