“அவர்கள் இருவரும் என் காதலர்கள் அல்ல,” கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த ப்ரியா ஆனந்த் !

12 August 2020, 9:13 am
Quick Share

எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக
துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.

இந்தநிலையில், ஆரம்பத்தில் இவருடன் இணைந்து நடித்த அதர்வா மற்றும் கெளதம் கார்த்திக் அவர்களுடன் கிசு கிசு எழுந்தது. அந்த இரண்டு கதாநாயகர்களில் பிரியா ஆனந்த் மனம் கவர்ந்தவர் யார்? என்று அவரிடமே கேட்கப்பட்டது. அதற்கு அவர் கொடுத்த பதில் சொல்லவே “அதர்வா, கவுதம் கார்த்திக் இருவருமே என்னோட நல்ல நண்பர்கள். அவர்கள் என் காதலர்கள் அல்ல,”? என்று கூறியுள்ளார்.