“முட்டாள்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை” – ரசிகரிடம் கோபப்பட்ட பிரியா பவானி ஷங்கர் !

4 May 2021, 6:59 pm
Quick Share

2017- ஆம் ஆண்டு ரீலீஸ் ஆன மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இவர் முதன் முதலில் புதிய தலைமுறை சேனலில் நியூஸ் Anchor ஆக இருந்து அதன் பிறகு விஜய் டிவி சீரியல்களில் நடித்து, அதன் பின்பே சினிமாவிற்கு வந்தார். மேயாத மான் படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது களத்தில் சந்திப்போம் ரிலீஸ் ஆன நிலையில் இதற்கு அடுத்து, இந்தியன் 2, குருதி ஆட்டம், ஹரிஷ் கல்யாணுடன் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார். இந்தநிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்றதை ஆதரித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

இதைப் பார்த்த எதிர்க்கட்சியை சேர்ந்த வாக்காளர் ஒருவர் பிரியாவை திமுக சேர்ந்தவர் என்று குத்தி காட்டி பேச, டென்ஷனான ப்ரியா பவானி சங்கர், “நடிகைக்கு முன்னாலே நான் ஒரு ஜர்னலிஸ்ட்” என பதிலடி கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பிரியா பவானியின் பழைய பதிவுகளை எடுத்து அதை பற்றி அந்த நபர் கேள்வி கேட்க, டென்ஷனாகி முட்டாள்தனமான பதிவுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது போன்ற கருத்தை பதிவிட்டு அந்த ரசிகரின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Views: - 79

0

1