ஏன் எல்லாரும் என்கிட்டயே அட்ஜெஸ்ட்மென்ட் கேட்குறீங்க? கொந்தளித்த பிரியா பவானி ஷங்கர்!

Author:
9 August 2024, 7:53 pm

மீடியா உலகில் செய்தி வாசிப்பாளினியாக அறிமுகமாகி அதன் பிறகு சின்னத்திரை சீரியல் நடிகையாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் தான் ப்ரியா பவானி சங்கர். அதன் மூலம் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படம் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

priya bhavani shankar

இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்பதற்கு மிகவும் கோபமாக பதில் அளித்திருக்கிறார். அதாவது நான் பத்து தல படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அப்படத்தின் ப்ரோமோஷன்களில் கலந்து கொண்டேன். அப்போது சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கா? என்று எல்லோரும் என்கிட்ட கேக்குறாங்க.

அதை ஏன் எல்லோரும் என்கிட்ட வந்து கேக்குறீங்க? இதுக்கு முன்பு இதை என்னிடம் யாருமே கேட்டதில்லை. நான் ஒரு படத்தில் நடிக்கும் போது இந்த கேள்வி ஏன் வருது? இதை ஒரு ஹீரோவிடம் சென்று கேட்பீர்களா? உங்கள் படத்தில் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கா என்று கேட்பீர்களா? இங்கு யாரும் நான் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணேன் வேறு வழியை பயன்படுத்திக் கொண்டேன் என்று வெளிப்படையாக சொல்லவே மாட்டார்கள். தயவுசெய்து இந்த கேள்வி கேட்பது இத்தோடு நிறுத்துங்கள் என கடுங்கோபத்துடன் பேசினார்.

  • Actor Ajith admitted to Apollo Hospital அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?