என் மார்பகத்தின் SIZE…. முகம் சுளிக்காமல் கூறிய பிரியா பவானி சங்கர்!

Author: Shree
10 July 2023, 10:21 am

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.

பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் , பத்து தல, அகிலன், ருத்ரன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் கடற்கரையோரம் புதிய வீடு வாங்கி காதலர் ராஜவேலுடன் குடியேறினார். மேலும், புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்து தனது கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வந்தார். தொடர்ந்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களின் கேள்விக்கு பதிலளித்த பிரியா பவானி சங்கரிடம் ஒருவர் உள்ளாடை Size என்ன என்று கேட்டதற்கு, என்னுடைய சைஸ் 34டி. மார்பகங்களை நான் வேறு கிரகத்தில் இருந்து வாங்கவில்லை. உங்கள் குடும்பத்தில், வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கும் அதே போல் தான் இருக்கிறது. நீங்கள் zoom செய்து டி-ஷர்ட் வழியாக பார்த்தால் உங்களுக்கே அது தெரியும் என்று கொச்சையான கேள்விக்கும் முகம் சுளிக்காமல் கூல் பதிலடி கொடுத்துள்ளார்.

  • Don't commit Nayanthara to cast in my film... Superstar's sudden order மறுபடியும் என் படத்துல நயன்தாராவ போடாதீங்க… சூப்பர் ஸ்டாரின் திடீர் கட்டளை : என்ன ஆச்சு?