“”இவர்” தான் என்னோட Crush” – முதன் முறையாக இந்த உண்மையை சொன்ன பிரியா பவானி ஷங்கர்…!

25 March 2020, 4:59 pm
Quick Share

ரத்னகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இவரின் நடிப்பு திறமையை வைத்துக்கொண்டு படிப்படியாக முன்னேறி தற்போது இயக்குனர் ஷங்கரின் “இந்தியன் 2” திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக வயதானவர் தோற்றத்தில் நடித்துவருகிறார்.


முப்பது வயதினை தாண்டியும் இவர் இன்னும் கல்யாணம் செய்துக்கொள்ளவில்லை. இவர் இதற்கு முன்னர் ஒரு சின்னத்திரை நடிகரை காதலித்து வந்ததாக பரவிய செய்தி பொய்யென்றும் கூறிவந்தார். பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான SJ சூர்யாவுடன் இணைந்து தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் நடித்ததால் இருவரும் காதலித்து வந்ததாக வதந்திகள் குவிந்தன.


அதனை SJ சூர்யாவே மறுத்து விட்டதால் பிரியா பவானி ஷங்கரிடம் இதனைப்பற்றி கேட்டதற்கு “எனக்கு எப்போதும் மாதவன் சாரைத் தான் பிடிக்கும். அவர் தான் என்னுடைய ஆல் டைம் Crush என்று பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.