கல்யாணம் வேண்டாம் ரொமான்ஸ் வேணும்.. பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படம்..!

Author: Vignesh
14 November 2023, 9:38 am

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.

பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் , பத்து தல, அகிலன், ருத்ரன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் கடற்கரையோரம் புதிய வீடு வாங்கி காதலர் ராஜவேலுடன் குடியேறினார். மேலும், புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்து தனது கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வந்தார். இதனிடையே திடீரென பிரியா பவானி ஷங்கர் தனது காதலரை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால், அதெல்லாம் வதந்தி சமீபத்தில் வெளிநாட்டில் காதலனுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோக்கள் வெளியாகி வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நீண்ட நாள் நண்பர் ராஜவேல் என்பவரை காதலித்து வரும் ப்ரியா பவானி சங்கர் அவருடன் சமீபத்தில் வெளிநாட்டிற்கு சென்று அடிக்கடி போட்டோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். தற்போது, தீபாவளி அன்று அவர்கள் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். இதனிடையே, ரசிகர்கள் கல்யாணம் வேண்டாம் ஆனா ரொமான்ஸ் மட்டும் வேண்டுமா என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?