“ப்ரியாமணியின் திருமணம் செல்லாது…” முதல் மனைவி கொடுத்த அதிர்ச்சி புகார் !,

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2021, 9:11 am
Priyamani - Updatenews360
Quick Share

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.

மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு மட்டும் ஓரவஞ்சனை கடும் விதமாக கவர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார்.

சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர். அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார். இவர் நடித்த FAMILYMAN 2 Web Series விமர்சனங்கள் அப்படி இப்படி இருந்திருந்தாலும் ஒரு தொடராக பார்க்க விறுவிறுப்பாக நன்றாகவே இருக்கிறது.

இந்நிலையில் பிரியாமணியின் கணவரான முஸ்தபா ராஜ் முதல் மனைவி ஆயிஷா, “என்னை சட்டபூர்வமாக விவாகரத்து செய்யாமல் முஸ்தபா ராஜ் நடிகை பிரியாமணியை திருமணம் செய்து கொண்டார். இதனால், பிரியாமணியின் திருமணம் சட்டவிரோதமானது, அது செல்லாது” என கிரிமினல் வழக்கு தொடுத்திருக்கிறார். இந்த செய்தி கோலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 377

1

4