பிரியங்கா சோப்ராவின் ஒரு இன்ஸ்டா போஸ்டுக்கு இத்தனை கோடியா.. கேட்டதும் தல கிர்ர்ர்ன்னு சுத்துதே..!

Author: Vignesh
4 October 2023, 6:00 pm

இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் நடித்த பிரியங்கா பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலிலும் பிரியங்கா சோப்ரா இடம் பிடித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். பின்னர், வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பெற்றுக்கொண்டனர் பிரியங்கா- நிக் ஜோன்ஸ் தம்பதியினர்.

தொடர்ந்து இருவரும் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார். இதனிடையே பாலிவுட் சினிமாவில் பெரும் அரசியல் நிலவி வருவதாகவும் தன்னால் இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டதாக பேரதிர்ச்சி கொடுத்தார்.

priyanka chopra - updatenews360

இந்நிலையில் பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராமில் 89.5 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட இவர் ஒரு பதிவுக்கு மூன்று கோடி சம்பாதிக்கிறாராம். ஷாருக்கான் 80 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை வாங்குகிறாராம். ஆலியா பட் ஒரு கோடியும், ஷ்ரத்தா கபூர் 1.18 கோடியும், தீபிகா படுகோனே 1.5 கோடியும் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபிகா, ஷாருக்கான் போன்ற பிரபல நட்சத்திரங்களை தாண்டி பிரியங்கா சோப்ரா பெரும் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு சம்பளம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

priyanka chopra - updatenews360
  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!