வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா – நிக்கி ஜோனஸ் தம்பதி..!

Author: Rajesh
22 January 2022, 10:44 am
Priyanka Chopra - Updatenews360
Quick Share

இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் நடித்த பிரியங்கா பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலிலும் பிரியங்கா சோப்ரா இடம் பிடித்துள்ளார்.


பிரியங்கா சோப்ரா கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.


இந்நிலையில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுகொண்டதாக பிரியங்கா- நிக் ஜோன்ஸ் தம்பதியினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றோம் என்பதை உறுதிப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சிறப்புமிக்க நேரத்தில் நாங்கள் எங்கள் குடும்பம் குறித்து கவனம் செலுத்துவதால் தனிப்பட்ட விசயங்களுக்கு மதிப்பு அளிக்க கேட்டுகொள்கிறோம், மிக்க நன்றி’ என்று தெரிவித்துள்ளனர்.

Views: - 4130

0

0