மாகாபா ஆனந்துக்கும், பிரியங்காவுக்கும் அப்படி என்ன பஞ்சாயத்து? பிறந்தநாள் வாழ்த்து கூட சொல்லல..!!
Author: Udayachandran RadhaKrishnan22 May 2025, 3:52 pm
விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் மக்களிடையே சென்றடைய காரணம் தொகுத்து வழங்கும் மாகாபா மற்றும் பிரியஃகா என்றே சொல்லலாம்.
நையாண்டி, நகைச்சுவையாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வருகின்றனர். பல வருடமாக இருவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இதையும் படியுங்க: இவரா? இவர் விவகாரமான டைரக்டர் ஆச்சே- தனுஷின் கலாம் போஸ்டாரால் சலசலப்புக்குள்ளான நெட்டிசன்கள்!
ஆனால் சமீப காலமாக இருவருக்குள் ஏதோ பிரச்சனை இருப்பது போல கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அண்மையில் பிரியங்கா திருமணத்திற்கு மாகாபா வரவில்லை. காரணம், அவரது திருமண நாள் என்பதால் மாலத்தீவு சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் மாலத்தீவு சென்று வந்தும் கூட,பிரியங்காவுக்கு இன்ஸ்டாவில் கூட ஒரு வாழ்த்து சொல்லவில்லை என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் மாகாபா தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில், பிரியயங்கா எந்த வாழ்த்தையும் சொல்லவில்லை, மாறாக தன்னுடைய திருணம போட்டோக்களை இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் ஆக வைததுள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சனை இருக்கிறதா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருவேளை இருவரும் நிகழ்ச்சிகளுக்காக மட்டும் நட்பாக இருக்கிறார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
