“வரிக்குதிரை..” ப்ரியங்கா மோகனின் Photos !

Author: Rajesh
20 June 2022, 12:28 pm

சின்னத்திரையின் மூலம் தனது திறமையை காட்டி சினிமாவில் தற்போது ஓஹோவென உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். தனது நகைச்சுவை திறனால் குழந்தைகள் மற்றும் இல்லத்தரசிகளின் ஃபேவரட்டாக மாறினார். 3 திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார்.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் அடுத்த படமான டாக்டர் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இவருக்கு ஜோடியாக நானியுடன் கேங் லீடர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கேங் லீடர் படத்தில் அமைதியாக வந்து போனவர், டாக்டர் படத்தில் அட்டகாசமாக ஆட்டம் போடுகிறார்.

மேலும் இவர் நடித்த எதற்கும் துணிந்தவன், Don என இரு படங்களிலும் இவரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்று வருகிறது.

அதுமட்டுமில்லாமல் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்க போகும் படத்திற்கு இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அவ்வளவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத ப்ரியங்கா மோகன், தற்போது வரிக்குதிரை ஸ்டைலில் உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  • raai laxmi open talk about relationship with dhoni  என் வாழ்க்கைல ஏற்பட்ட கறை? தோனியுடனான பிரேக் அப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பிரபல நடிகை…