கணவருக்கு இறுக்கி பிடிச்சு முத்தம் கொடுத்த பிரியாராமன் – வைரல் புகைப்படம் !

Author: Udayachandran
24 July 2021, 10:36 am
Ranjith Priya Raman - Updatenews360
Quick Share

90களின் நடிகர்கள் தற்போது காமெடியன்களாகவும் சீரியல்களிலும் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டனர். மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், பொன்னம்பலம் ஆகியோர் படங்களில் காமெடியனாக நடிக்க ஆரம்பித்தாலும், நம்ம நடிகர் ரஞ்சித் சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். பாண்டவர் பூமி, பசுபதி ராசக்காபாளையம், நினைத்தேன் வந்தாய், நட்புக்காக, சேரன் சோழன் பாண்டியன் போன்ற படங்களில் நடித்துள்ளார் ரஞ்சித்.

இவருடன் நேசம் புதுசு படத்தில் இணைந்து நடித்தவர் பிரியா ராமன். இதுமட்டுமில்லாமல் வள்ளி, சூரிய வம்சம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இருவரும் 1999இல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

தற்போது இருவரும் சின்னத்திரையில் செம பிஸியாக உள்ளனர். ரஞ்சித் விஜய் டிவியில் ஒரு சீரியலிலும், பிரியா ராமன் ஜீ தமிழ் சீரியலிலும் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இவர்களது திருமண நாள் வந்தபோது அதை இருவரும் சேர்ந்து கொண்டாடியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான், தற்போது ரஞ்சித் நடித்து வரும் “செந்தூர பூவே’ தொடரில் சிறப்பு தோற்றத்திலும் ப்ரியாராமன் நடிக்கிறார். இவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 571

18

6