லாபம் கொடுத்த கர்ணன்: தயாரிப்பாளருக்கு பாராட்டு!

12 April 2021, 8:43 am
Quick Share


தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணுவைப் பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் பட்டாஸ். இந்தப் படம் போதுமான வரவேற்பு பெறவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் கர்ணன்.


கீழ் சமூகத்தினரைச் சேர்ந்த மக்கள் மேல் சமூகத்தினராலும், அரசாங்க அதிகாரிகளாலும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்காக தனி ஒருவராக நின்று போராடும் கதையை மையப்படுத்தி கர்ணன் படம் உருவாக்கப்பட்டிருந்தது. கடந்த 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியான கர்ணன் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.


இந்த நிலையில், சென்னை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளில் கர்ணன் வசூல் வாரி குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்தப் பகுதிகளைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவை சந்தித்து அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 85

0

0