ARR குரலில் நாடி நரம்பெல்லாம் பாயும் “பொன்னியின் செல்வன் 2” அந்தம் – வீடியோ ரிலீஸ்!

Author: Shree
15 April 2023, 10:49 pm

மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி சரித்திர வெற்றி படைத்தது. அதையடுத்து இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. லைக்கா தயாரிக்கும் இப்படத்தின் முதல் சிங்கிளாக ‘அக நக’ பாடல் அண்மையில் வெளியாகியது. பாடகர் சக்தி ஸ்ரீ கோபாலன் பாடிய இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் வரிகள் எழுதியிருந்தார். வந்தியத்தேவன் கார்த்தி, குந்தவி த்ரிஷா ரொமான்டிக் பாடலான அப்பாடல் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

அதை தொடர்ந்து, வீரா ராஜ வீரா பாடல் வெளியாகியது. இந்நிலையில் தற்போது ‘பொன்னியின் செல்வன் 2’ அந்தம் பாடல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் அவரே பாடி நடித்துள்ள, இப்படலின் வரிகள் ராஜ ராஜ சோழனான அருண் மொழி வர்மனின், வீரம், போர், அறிவு கூர்மை உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்கள் குறித்து விவரிக்கிறது. இதோ அந்த பாடல் வீடியோ.

  • lokesh kanagaraj introduce as a hero in upcoming film லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!