புஷ்பா – 2 படத்தின் மொத்த பட்ஜெட் இத்தனை கோடிகளா..? வெளியான அதிர வைக்கும் தகவல்.

Author: Rajesh
12 May 2022, 12:29 pm

நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் மிகப் பெரிய ஹிட் ஆனது. தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியில் மிகப்பெரிய வசூலை குவித்தது புஷ்பா. அதனால் அடுத்த பாகத்தை இன்னும் மிக பிரம்மாண்டமாக எடுக்க படக்குழுவினர் முடிவெடுத்து இருக்கின்றனர்.

கேஜிஎப் 2 படத்தின் வெற்றியை பார்த்து அனைவரும் வியந்து இருக்கும் நிலையில் அதற்க்கு இணையாக புஷ்பா அடுத்த பாகத்தையும் மேலும் பட்ஜெட் ஒதுக்கி பிரம்மாண்டமாக எடுக்க கதையில் சில மாற்றங்களை இயக்குனர் சுகுமார் செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் அல்லு அர்ஜுன் வாங்கும் சம்பளம் பற்றி ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளிவந்து இருக்கிறது.
மொத்த பட்ஜெட் 400 கோடி ருபாய் என்றும், அதில் அல்லு அர்ஜுன் மட்டுமே 100 கோடி ரூபாயை சம்பளமாக பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!