புஷ்பா 2 கூட்டநெரிசல் சம்பவம்.. மூளைச்சாவு அடைந்த சிறுவன் : யார் பொறுப்பு?!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2024, 12:07 pm

நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் திடீரென அல்லு அர்ஜூன் விசிட் அடித்தார்.

இதனால் படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து ஓடினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் படம் பார்க்க வந்த பெண் ரேவதி மற்றும் அவரது மகன் ஆகியோர் காயமடைந்தனர்.

இதையும் படியுங்க: படப்பிடிப்பில் விபத்து… பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி!!

இதில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சையில் உள்ளார். இதையடுத்து அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார்.

ஆனால் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. நடிகர் ஒருவர் தான் காரணம் என கூற முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.

அதே போல, தியேட்டர் பணியாளர்கள், அல்லு அர்ஜூன் பவுன்சர்களை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

படுகாயமடைந்த சிறுவன் தேஜ், தற்போது மூளைச்சாவு அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!