யாரோடது பெரிசு…. சூட்டிங் ஸ்பாட்டில் இரு நடிகைகளிடையே நடந்த குடுமிப்பிடி சண்டை..!

Author: Vignesh
6 December 2023, 4:00 pm

பொதுவாக சினிமாவை பொறுத்தவரை சக நடிகர், நடிகைகள் நட்பாக பழகி படத்தில் சிலர் நடித்துக் கொடுப்பார்கள். ஆனால், ஒரு சிலர் ஈகோவின் காரணமாக சக நடிகர் நடிகைகளை மட்டமாக நினைத்து சண்டை போட்ட சம்பவங்களும் அரங்கேறி உள்ளது.

அந்த வகையில், தமிழ் சினிமாவில் வெளியான ஒரு படத்தில் நடந்த சம்பவம் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, 2006 இல் வெளியான ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தில் தான் நடித்த நடிகைகளுக்கு சண்டை வந்து பெரிய பிரச்சனையானது.

rambha-updatenews360

நடிகை ரம்பா மற்றும் ராய் லட்சுமி என்ற இரு நடிகைகள் சண்டையிட்டு கொண்டனர். இருவருக்கும் ஒரு காட்சியில் இணைந்து நடிக்க வேண்டும் என்று உதவி இயக்குனர் கூறி இருக்கிறார். ஆனால், இருவருக்கும் தலைகனம் அதிகரிக்க சேர்ந்து நடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாக நடிக்க மாட்டோம் என்று சூட்டிங் ஸ்பாட்டில் கூறியதோடு, யார் பெரிய நடிகை யாரோட மார்க்கெட் பெரியது என்று சண்டையிட்டு வாக்குவாதமும் செய்துள்ளனர். அது தலைக்கேறி இரு நடிகைகளும் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு சண்டையும் போட்டு இருக்கிறார்கள்.

அதன் பின்னர் பட குழு சமாதானம் செய்து ரணகளத்தை அடக்கி இருக்கிறார்கள். பின் எவ்வளவோ முயற்சி செய்தும் இருவரும் ஒன்றாக நடிக்க மறுத்ததால் தனித்தனியாக நடிக்க வைத்து படத்தினை பட குழுவினர் வெளியிட்டனர். ஆனால், அப்படம் வெளியானது கூட தெரியாமல் தயாரிப்பாளருக்கே பெரிய நஷ்டத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!