ரவுடி பேபியாக மாறிய ராதிகா; உற்சாகத்தில் துள்ளிக் குதித்த வரலட்சுமி சரத்குமார்

Author: Sudha
2 July 2024, 4:59 pm

வரலட்சுமி சரத்குமார் தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சிறந்த நடிகை.

இவரும் தொழிலதிபர் நிக்கோலை சச்தேவ் என்பவரும் காதலித்து வந்தனர்.இவர்களுடைய நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. நிக்கோலை ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தனவர் எனவே நிறைய நேர்மையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை நெட்டிசன்கள் முன் வைத்தனர்.

இவர்களுடைய திருமணம் தாய்லாந்தில் நடைபெறுகிறது.
நேற்று நடைபெற்ற ஹல்தி விழாவில் ராதிகா மற்றும் ராடன் இருவரும் சேர்ந்து ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடினார்.இது சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சரத்குமார் அப்படி போடு பாடலுக்கு நடனமாடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
குடும்பத்தினரின் மகிழ்ச்சியில் தானும் இணைந்து புது வாழ்வில் இணைய ஆயத்தமாகி விட்டார் வரலட்சுமி சரத்குமார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?