உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்: தடுப்பூசி போட்டுக்கொண்ட ராதிகா டுவீட்!

2 March 2021, 2:18 pm
Quick Share

நடிகை ராதிகா சரத்குமார் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒட்டு மொத்தமாக உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா தாக்கம் இன்னும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. அப்படியிருக்கும் சூழலில் மக்கள் யாரும் தங்களை பாதுகாப்பது போன்று தெரியவில்லை. சமூக இடைவெளியையும் கடைபிடிப்பதும் இல்லை, மாஸ்க்கும் அணிவதில்லை. அரசு என்னதான் முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், உருமாறி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் போடப்பட்ட லாக்டவுன் இன்றும் தொடப்பட்டு வருகிறது.

ஆனால், என்ன, தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் தான் இந்த மாதம் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவாக்‌ஷின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதில், முதல்கட்டமாக, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என்று முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. எனினும், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கொரோனா தடுப்பூசிகள் போடும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது நடிகை ராதிகா சரத்குமார் தான் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தயவு செய்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், அன்புக்குரியவர்கள் தடுப்பூசி போடுங்கள், அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள், தலைவர் கமல் ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 40

0

0