ருத்ரன் படப்பிடிப்பை தொடங்கிய ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் கூட்டணி!

21 January 2021, 5:02 pm
Quick Share


ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பேய் படங்களில் ஹிட் கொடுப்பதில் ராகவா லாரன்ஸூக்கு நிகர் யாருமில்லை. ஒரு நடிகர், இயக்குநர், நடன இயக்குநர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் முனி 4: காஞ்சனா 3 படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது ருத்ரன் என்ற படத்தில் நடிக்கிறார்.

இதில், இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்
தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் ருத்ரன் படத்தின் மூலமாக இயக்குநராகவும் அவதாரம் எடுக்கிறார். இவர் இதற்கு முன்னதாக பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தற்போது ருத்ரன் படத்தை இயக்குவதோடு அந்தப் படத்தை தயாரிக்கவும் செய்கிறார். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில், ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ்,

இயக்குநர் கதிரேசன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர். தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது உயிரிழந்த சேலத்தைச் சேர்ந்த யோகேஸ்வரனின் நினைவாக அவன் பெயர் பொறித்த தங்க காசுகளை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளேன் என்று டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0