“இனி நான் இந்த சீரியலில் நடிக்க மாட்டேன்”.. 2-வது நடிகையும் விலகல்..! டென்ஷனான இயக்குனர்..!

Author: Vignesh
16 February 2023, 8:30 pm

விஜய் டிவியில் ராஜா ராணி என்ற தொடரில் நாயகியாக நடித்தார் ஆல்யா மானசா. முதலில் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

ராஜா ராணி என்ற தொடரில் ஆல்யா மானசாவுக்கு பெரிய அளவில் ரீச் கிடைத்தது. ராஜா ராணி தொடரில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

Rajarani_updatenews60

ராஜா ராணி 2 தொடரில் இருந்து தனது இரண்டாவது பிரசவத்திற்காக நடிப்பை நிறுத்திய ஆல்யா மானசா தற்போது புதிய சீரியலில் நடித்து வருகிறார்.

ஆல்யா மானசாவிற்கு பதிலாக ரியா விஸ்வநாதன் தான் புதிய சந்தியாவாக களமிறங்கி பழைய சந்தியாவை மறந்து புதிய சந்தியாவை மக்கள் ஏற்றுக் கொண்ட இந்தநிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சீரியலில் இருந்து தானும் விலகுவதாக தனது சமூக வலைத்தளமொன்றில் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியில் “கோகுலத்தில் சீதை” என்ற சீரியலில் நடித்த ஆஷா கௌடா தான் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் நடித்த எபிசோடுகள் இன்னும் இரண்டு நாட்களில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

raja rani - updatenews360
  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!