உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த ராஜா ராணி புகழ் சஞ்சீவ் : உச்சக்கட்ட கோபத்தில் பிரபலங்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2021, 1:34 pm
Kayal Serial - Updatenews360
Quick Share

இல்லத்தரசிகளை சீரியல்களால் கட்டிப்போட்டுள்ள சன் டிவி, விஜய் டிவிக்கும் வார வாரம் உச்சக்கண்டை சண்டை நடைபெறுவது வழக்கம். என்னது சண்டையானு நினைக்க வேண்டாம், வாரம் வாரம் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில் யார் ஃபர்ஸ்ட் என்பதில் இரு தொலைக்காட்சிக்கு போட்டி இருக்கும்.

அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த வாரத்திற்கான டாப் சீரியலில் சன்டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் இடம்பிடித்துள்ளது. கயல் சீரியல் துவங்கப்பட்டது முதலே நல்ல வரவேற்பு இருந்தது.

அதற்கு முக்கிய காரணம், விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ் தான். இரண்டாவது காரணம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்த சைத்ராவும்.

இவர்கள் இருவரும் சேர்ந்து கலக்கியுள்ள கயல் நாடகம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் விஜய் டிவி செம கோபத்தில் உள்ளதாம். வெள்ளித்திரையில் நடித்து வாய்ப்பில்லாமல் திண்டாடிய சஞ்சீவுக்கு விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் தான் பெயர் வாங்கி கொடுத்தது.

ஆனால் தற்போது விஜய் டிவியை பின்னுக்கு தள்ளி சஞ்சீவ் நடித்த கயல் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. டிஆர்பி ரேட்டிங்கில், முதல் இடத்தில் கயல், இரண்டாது இடத்தில் வானத்தைபோல, மூன்றாவது இடத்தில் சுந்தரி என முதல் மூன்று இடங்களை சன்டிவி பிடித்துள்ளது. 4வது இடத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் இடம்பிடித்துள்ளது. 5வது இடத்தில் ரோஜா சீரியல் வந்துள்ளது.

இப்படி முதல் டாப் 5இடங்களில் சன்டிவியே கோலோச்சியுள்ளது. தாய் வீட்டுக்கு இப்படி துரோகம் பண்ணலாமா என விஜய் டிவி பிரபலங்கள் கடிந்துள்ளனர். தொழில் போட்டியாக வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில் வார வாரம் முதலிடத்தை பிடிப்பதில் சேனல்களுக்குள் நடக்கும் இந்த போட்டி சகஜம் தான்.

Views: - 988

8

3