‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகையின் போட்டோ ஆபாசமாக சித்தரிப்பு : 24 மணி நேரத்தில் சிக்கிய குற்றவாளிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2021, 6:46 pm
Raja Rani 2- Updatenews360
Quick Share

ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகையின் போட்டோவை ஆபாசமாக சித்திரித்து இணையத்தில் பதிவேற்றியவரை போலீசார் கைது செய்தனர்.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இல்லத்தரசிகளின் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமரும் சீரியல்கள் விரல்களை விட்டு எண்ணிவிடலாம்.

சீரியல்களில் யார் அதிக ரசிகர்களை கவர்ந்தது என்ற போட்டி தொலைக்காட்சிகளுக்கிடையே நடந்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்களை வீட்டுக்குள் கட்டிப் போட்ட விஜய் டிவியின் சீரியல்தான் ராஜா ராணி. இந்த சீரியல் நல்ல வரவேற்பை கொடுத்ததால் தற்போது இரண்டாவது பாகமும் ஒளிபரப்பாகி வருகிறது.

Praveena: அரசியலில் குதிக்கும் ராஜா ராணி 2 சீரியல் மாமியார் பிரவீனா? - raja  rani 2 serial actress praveena denies reports on her political entry |  Samayam Tamil

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பிரவீணா. இவர் எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருப்பவர். தனது புகைப்படங்களை பதிவிட்டு அதிக ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர்.

இந்த நிலையில் பிரவீணாவின் போட்டோ ஒன்றை ஆபாசமாக மார்பிங் செய்து இணையதளங்களில் மர்மநபர்கள் பதிவேற்றியுள்ளனர். மார்பிங் செய்த புகைப்படங்களை பிரவீணாவுக்கே திரும்ப வந்துள்ளது.

raja rani serial actress background ராஜா ராணி 2 மாமியார் நடிகை

இதையடுத்து மர்மநபரை பிளாக் செய்த பிரவீணா அவர்களை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் மீண்டும் தனது போட்டோவை ஆபாசமாக சித்தரித்து வருவதாக சைபர் கிரைம் போலீசில் பிரவீணா புகார் அளித்தார்.

ராஜா ராணி 2' சீரியல் நடிகை இந்த பிரபல நடிகையின் நெருங்கிய சொந்தமா?...  பலரும் பார்த்திடாத வைரல் புகைப்படம்...! | Raja Rani season 2 serial actress  Praveena is a ...

இதையடுத்து குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் டெல்லி வரை சென்று பிடித்த காவலருக்கு பிரவீணா நன்றி தெரிவித்துள்ளார்.

Views: - 331

7

1