“மீண்டும் அரசியல் பிரவேசம்“ : மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை!!

12 July 2021, 10:38 am
Rajini - Updatenews360
Quick Share

நா அரசியலுக்கு வருவது உறுதி ! நா இன்னும் முழுமையான அரசியல்வாதியா ஆகல ! அட என்னையா இந்த ஆளு மாத்தி மாத்தி பேசுறாரு ! இவரோட படங்கள் ரிலீசாகும் போது வீர வசனங்கள் பேசுவாரு, அப்புறம் எஸ்கேப் ஆகிடுவாரு, என்று ரஜினி மீது வைக்கப்பட்ட பல விமர்சனங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் அந்த விமர்சனங்கள் உண்மை என்பது போல நடந்து கொண்டார்.

சரி எல்லாம் முடிஞ்சு போச்சு இனிமே அண்ணாத்த படத்துக்கு வெயிட் பண்ணுவோம், என்று நினைத்துக் கொண்ட ரசிகர்களுக்கு தற்போது அதிர்ச்சி கொடுத்துள்ளார். இன்பஅதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும், ஆனால் பல ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாக உள்ளது. சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து வந்த ரஜினி தற்போது செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

அதில் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா்களை, சென்னை ராகவேந்திரா மண்டபத்தில், சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பிற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Views: - 200

1

3