“நான் இந்த வருஷம் Full-ஆ ஷூட்டிங் வரமாட்டேன்” அப்போ அண்ணாத்த Drop-ஆ ? கவலையில் சிவா !

Author: Poorni
11 October 2020, 1:45 pm
Quick Share

விசுவாசம் வெற்றிக்குப் பிறகு அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா அவர்களது இயக்கத்தில் அண்ணாத்த என்னும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது எல்லோரும் போல் வீட்டில் இருந்தபடியே இருக்கும் சூப்பர் ஸ்டார், அவ்வப்போது சமுதாயத்தில் நடக்கும் கொடுமைகளை கண்டு தனது அபிப்பிராயங்களை தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் ஏற்கனவே ‘அண்ணாத்த’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டது. தற்போது இருக்கும் நிலையில் ரஜினி ஷூட்டிங் வர வாய்ப்பே இல்லை என்று தெளிவாக சொல்லிவிட்டார். இப்படியே போனால் இந்த படம் Drop ஆக வாய்ப்பு இருப்பதாகவும் ‘அண்ணாத்த’ படக்குழு கருதுகின்றனர். இதனால் அஜித்தின் ஃபேவரட் இயக்குனர் சிவா கவலையில் உள்ளார்.

என்னதான் இயக்குனர் கவலையாக இருந்தாலும் படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன், “கண்டிப்பாக இந்த படம் மீண்டும் தொடங்கும். அது எப்படி 50% முடிந்த படத்தை அப்படியே கையை விட்டு ஓடிவிடுவார்கள். அப்படியெல்லாம் பண்ண முடியாது, கண்டிப்பாக அண்ணாத்த திரைப்படம் தமிழ் புத்தாண்டில் திரைக்கு வரும். படம் வெற்றியடைய போவது 100% உறுதி ” என்று கம்பீரமாக இருக்கிறார்.

Views: - 31

0

0