பயத்தில் நடுங்கி வேண்டாம்னு ஒதுங்கிய ரஜினி, கமல் – துணிச்சலோடு Biopic’ல் நடிக்கும் தனுஷ்!
Author: Shree31 அக்டோபர் 2023, 6:08 மணி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் எந்த இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் தனுஷ் வெளியிட்டிருந்தார். ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததால் தனுஷ் தனது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
அந்த வகையில் தனுஷ் இசைஞானி இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க உள்ளார். இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க ரஜினி , கமலே பயந்து வேண்டாம் என ஒதுக்கிவிட்டார்களாம். ஆனால், தனுஷ் தற்போது துணிந்து இறங்கி நடிக்க உள்ளதை கோலிவுட்டே வியந்து பார்த்து அவரை பாராட்டி வருகிறதாம். இப்படம் நிச்சயம் தனுஷிற்கு தேசிய விருது வாங்கி கொடுக்கும் என பலர் நம்பிக்கை கூறி வருகின்றனர்.
12
2