“யப்பபா தலைவர் செம்ம மாஸ்” ரீலீஸ் தேதியோடு அண்ணாத்த படத்தின் மாஸ் போஸ்டர் வெளியீடு !

Author: Udhayakumar Raman
1 July 2021, 6:37 pm
Quick Share

விஸ்வாசம் வெற்றிக்குப் பிறகு அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா அவர்களது இயக்கத்தில் அண்ணாத்த என்னும் படத்தில் நடித்து முடித்துவிட்டார் ரஜினி. இந்த நிலையில் ஏற்கனவே ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது தல அஜித் நடிக்கும் வலிமை படம் கூட தீபாவளிக்கு வெளியாகும் என ஒரு தகவல் வந்துள்ளது. மேலும், படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே எடிட்டிங் வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் அண்ணாத்த படம் ஓரளவுக்கு முடிந்துவிட்டது. கடந்த மே 10 ஆம் தேதியிலிருந்து ரஜினியின் காட்சிகளை படமாக்கி முடித்து விட்டார் இயக்குநர் சிவா.

தற்போது இந்த படத்தின் First Look Soon என்று ரஜினி பின்னாடி திரும்பி இருப்பது போல ஒரு போஸ்டரை வெளியிட்டு தூள் கிளப்பியுள்ளார்கள். இதனை பார்த்த ரசிகர்கள், “யப்பபா தலைவர் செம்ம மாஸ்” என்று வியந்து வருகிறார்கள்.

Views: - 390

21

5