வீல் சேரில் ரஜினிகாந்த்… வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் UNSEEN புகைப்படம்..!

Author: Vignesh
10 February 2024, 3:49 pm
Quick Share

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் படத்தில் நடித்து படம் வெளியான நிலையில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

லால்சலாம் படம் முடித்த நிலையில், ரஜினி டிஜே ஞானவேல் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

rajini - updatenews360

இந்நிலையில், அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களாக தலைவர் 170 படத்தில் பணிபுரியும் நட்சத்திரங்களின் அறிவிப்பு ஒன்றின்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது.

rajini - updatenews360

இந்நிலையில், இப்படத்திலிருந்து சமீபத்தில் ரஜினியின் First லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இதுவரை பார்த்திராத மிரட்டலான லுக்கில் இருக்கிறார் ரஜினிகாந்த். மேலும், தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.

rajini - updatenews360

லால் சலாம் படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில், என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளதோடு, தன்னை வீல் சேரில் அமர வைத்து ஐஸ்வர்யா அழைத்து சென்றபோது எடுத்த அன்சீன் புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.

rajini - updatenews360
Views: - 226

0

0