100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ரஜினியின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடாதீங்க..!

Author: Vignesh
9 February 2024, 8:26 pm

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

முக்கியமாக திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவித்து வந்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருக்கு ரஜினிகாந்தின் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது.

மேலும் படிக்க: கவின் நடித்துள்ள “பிலடி பெக்கர்” எப்படி இருக்கு? முதல் விமர்சனம்!

Rajini First Salary

இந்நிலையில், மாபெரும் நடிகராக விளங்கி வரும் ரஜினிகாந்த் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார். தான் முதன் முதலில் ஹீரோவாக நடித்த படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த விவரம் தற்போது, இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

Rajinikanth Salary

இன்று உலக அளவில் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் தான் ஹீரோவாக நடித்த முதல் படத்திற்காக ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். அந்த காலத்தில் ஐந்தாயிரம் என்பது மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?