சீரியலில் அம்மாவாக நடிக்கும் ரஜினியின் மகள்.. வைரலாகும் புகைப்படம்..!

Author: Vignesh
16 January 2024, 1:20 pm

கர்நாடக மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து தமிழக மக்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் கடந்து வந்த பாதை மிக கடினமானது. திரைத்துறையில் ஜெயிக்க வேண்டும் என்றால் பளபளப்புடன் கூடிய தேஜசான உடல் தோற்றத்தோடு, வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிற ஃபார்முலாவையே மாற்றியவர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.

rajinikanth

இந்த வயதிலும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சினிமாவில் டப் கொடுத்து வருகிறார். வசூல் நாயகனாகவும், ரஜினிகாந்த் டாப்பில் இருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கூட இந்த குதிரை அப்போதே நின்றுவிடும் என நினைத்தார்கள் ஆனால், 40 வருடத்தை தாண்டி ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

rajini - updatenews360

முன்னதாக, ரஜினி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படங்களில் ஒன்றுதான் அண்ணாமலை. இந்த படத்தில், ரஜினிக்கு மகளாக தாட்சாயினி நடித்திருந்தார். இவர் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார். தற்போது, இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

serial-actress
  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!