பிளாக் மேஜிக் செய்யும் முனீஸ் ராஜா.. ஜீனத் தவிர 8 பெண்களை வசியப்படுத்தி.. ரகசியத்தை உடைத்த ராஜ்கிரண்..!
Author: Vignesh6 பிப்ரவரி 2024, 7:47 மணி
கிராம பாங்கான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்துபவர் நடிகர் ராஜ் கிரண் இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பிறந்து தமிழ் சினிமாவின் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். மிகவும் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர் குறிப்பாக கிராமத்து ரசிகர்களை குறிவைத்து நடித்து அவர்களின் தீவிர ரசிகர் ஆனார்.
தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். தான் மட்டும் வளர்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட நடிகர்களுக்கு மாறான ராஜ்கிரண் நிறைய புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துள்ளாார். தமிழ் சினிமாவின் தற்போது உச்ச காமெடி நடிகரான வடிவேலுவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து அவருக்கு வாழ்க்கை கொடுத்தவர் ராஜ்கிரண். கிட்டதட்ட 70 வயதை நெருங்கும் ராஜ்கிரண் இன்னும் படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தில் வயதான முதியவர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில், ராஜ்கிரணை எதிர்த்து திருமணம் செய்துக்கொண்ட அவரின் வளர்ப்பு மகள் காதல் கணவரை பிரிந்துள்ளார். பின்னர் நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் Daddy என வீடியோ வெளியிட்டு கதறி இருந்தார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் திருமணம் ஆன முதல் மாதத்தில் இருந்து கணவருக்கும் தனக்கும் பிரச்சனை தொடங்கிவிட்டது என்றும், குடித்துவிட்டு கண்டபடி அடிப்பார். மோசமாக பேசுவார் காலையில், எழுந்தவுடன் இரவு என்ன நடந்தது என்று தெரியாது போல தெளிவாகவே இருப்பார்.
ஆரம்பத்தில், இவருடைய இந்த குடிப்பழக்கத்தை மாற்றிவிடலாம் என்று நான் நம்பினேன். ஆனால், அது என்னால் முடியவில்லை. அதுமட்டுமின்றி, காசு கேட்டு அடிக்கடி டார்ச்சர் செய்வார். பிரிந்து செல்லலாம் என நினைத்தால் எனது மொத்த குடும்பத்தையும் அசிங்கப்படுத்துவேன் என மிரட்டல் விடுத்தும் வந்தார். இந்த சூழ்நிலையிலும், என் அப்பா தான் என்னை பார்த்துக் கொண்டார் என ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ராஜ்கிரண் தனது மகள் குறித்து பேசி உள்ளார். அதில், முனீஸ் ராஜா பணக்கார பெண்களை குறி வைத்து ஏமாற்றுவதை வேலையாக வைத்திருப்பதாகவும், அதற்காக கொல்லிமலையில் இருந்து வசிய மருந்துகளை வர வைத்து பெண்களுக்கு கொடுத்து வசியம் செய்வார். இதுவரை, 7, 8 பெண்களை முனீஸ் ராஜா வசியப்படுத்தி ஏமாற்றியுள்ளார். அவருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் இதுதான் வேலையே என்னுடைய மகள் ஜீனத்தை பிரிந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. நான் இப்போது, தனியாக ஒரு வீடு எடுத்து மகளை தங்க வைத்து பார்த்துக் கொள்கிறேன். முனீஸ் மற்றும் அவரது குடும்பத்தினரும் என்னுடைய மகளை மிகவும் துன்புறுத்தி உள்ளனர். பணத்திற்காக மட்டுமே என்னுடைய மகளை முனீஸ் அழைத்து சென்றார் என்று ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.
0
0