தெருநாயையே கல்யாணம் பண்ணிக்கோங்க- Dog Lovers பிரபலங்களை கண்டபடி கிழித்த இயக்குனர்?

Author: Prasad
18 August 2025, 11:21 am

நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு

நாடு முழுவதும் தெருநாய் கடியால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் தெருநாய் கடித்து 6 வயது குழந்தை இறந்துபோனது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து டெல்லி பகுதியில் உள்ள தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாய் பிரியர்கள் பலரும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் பிரபல நடிகைகளான நீலிமா, வினோதினி ஆகியோர் இத்தீர்ப்பை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகை சதா, கதறி அழுதபடி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். மேலும் ஜான்வி கபூர், சோனாக்சி சின்ஹா ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறு இந்தியா முழுவதும் நாய் பிரியர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Ram gopal varma slams actress who are dog lovers 

நாயையே திருமணம் செய்துகொள்ளுங்கள்

இந்த நிலையில் பிரபல இயக்குனரான ராம் கோபால் வர்மா, தனது எக்ஸ் தளத்தில் நாய் பிரியர்களை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். “நாய்கள் உங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் என பேசும் நீங்கள், ஏன் தெரு நாய்களை திருமணம் செய்துகொள்ளக்கூடாது? ஏழைகளை தத்தெடுத்து உங்கள் வீட்டுற்குள் அவர்களை கூட்டி வாருங்கள், தெருக்களை நாய்களுக்காக விட்டுவிடுங்களேன்? 

Ram gopal varma slams actress who are dog lovers 

தெருக்களில் நாய்கள் இருக்கவேண்டுமா? சரி, உங்கள் செல்ல நாய்களை தெருக்களில் விட்டுப்பாருங்கள், அது எவ்வளவு நாள் உயிர்பிழைத்திருக்கும் என பார்க்கலாம்?” என்று மிகவும் கடுமையாக விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார். இவரது டிவிட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!