உங்களை கொலை செய்ய ஒரு குரூப் இருக்கு.. ஜாக்கிரதையாக இருங்க ராஜமௌலி.. வார்னிங் விடுத்த சர்ச்சை இயக்குநர்..!

Author: Vignesh
25 January 2023, 3:00 pm

எஸ் எஸ் ராஜமௌலி என்றால் பிரம்மாண்ட இயக்குனர் வரலாற்று காவியங்களை பக்குவமாக திரை கதையில் அமைத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் என்று நாம் சொல்லலாம்.

இதற்கு உதாரணமாக இவர் இயக்கிய பாகுபலி 1 மற்றும் 2 படங்கள் மட்டுமல்லாமல் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்தையும் கூறலாம். தற்போது RRR திரைப்படம் ஆஸ்கார் அவார்டுக்கு இணையான கோல்டன் குளோப் அவார்டுக்கு வழங்கப்பட்டது.

மேலும் வெற்றி படங்களை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் இவரது தனி பாணியை பார்த்து இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் ஏராளமான அளவு இந்தியா முழுவதுமே உள்ளது.

அப்போது அந்த விழாவில் பங்கேற்ற பிரமாண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், ஆர்.ஆர்.ஆர் பட குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, இயக்குனர் ராஜமௌலியிடம் ” உங்களுடைய படம் மிக நன்றாக இருந்தது என்றும், உங்களுக்கு Hollywoodல் படம் இயக்க ஆர்வமாக இருந்தால் அது குறித்து நாம் பேசலாம்” என்று தெரிவித்திருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் ராஜமௌலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

rajamouli  - updatenews360

இதனிடையே, பிரபல இயக்குனர் ராம் கோபால்” ராஜமௌலி சார், தயவு செய்து உங்கள் பாதுகாப்பை அதிகரித்து கொள்ளுங்கள் என்றும், பல இயக்குனர்கள் உங்கள் மேல் கொலை வெறியில் உள்ளனர் என்றும், அதில் நானும் ஒருவன் எனவும், நான் மது அருந்தி விட்டு போதையில் இருப்பதால் உண்மையை கூறிவிட்டேன்” என்று ட்வீட் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, ராம் கோபால் பல கருத்துக்களை பதிவிட்டு அதனால் சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது வழக்கம் தான்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?