ரசிகர்களுக்கு டாட்டா காட்டும் ரம்யா பாண்டியன்.. விரைவில் காதலருடன் டும்டும்டும்…!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2024, 2:44 pm

நவம்பர் மாதமே காதலருடன் திருமணம் செய்ய ரம்யா பாண்டியன் தயாராகியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ரம்யா பாண்டியன், வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தாலும் பெரியளவுக்கு மார்க்கெட் இல்லாமல் போனது.

இதையடுத்து போட்டோஷூட்டில் பிஸியான அம்மணிக்கு அடிச்சது யோகம். மொட்டை மாடியில் சேலையில் இவர் காட்டிய கவர்ச்சி புகைப்படம் பட்டி தொட்டி எங்கும் வைரலானது.

இதையடுத்து விஜய்டிவி ரம்யா பாண்டியனை வாரி அணைத்து. முதலில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டம் பெறும் வாய்ப்பை மிஸ் செய்தார்.

ஆனால் மறுபடியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரம்யா பாண்டியனுக்கு வாய்ப்பு கொடுத்தது. விஷப் பாட்டிலாக உருவெடுத்த ரம்யா பாண்டியன், நூலிழையில் பிக் பாஸ் டைட்டில் வின்னரை மிஸ் செய்தார்.

இதையும் படியுங்க: இடுப்புல கை வைக்கிறான், தா*** : மஞ்சள் வீரன் இயக்குநரின் GAY சேட்டை.. பிரபலம் பகீர்!

இப்படி பல போட்டிகளில் பங்கேற்று பிரபலமான ரம்யா பாண்டியன், தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்.

இதனிடையே தான், யோகா பயிற்சிக்காக, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு யோகா பயிற்சியாளரான லோவன் தவானுடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் அது காதலாக மாறியது. இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக் கொடி காட்டியதால், சினிமாவுக்கு முழுக்கு போட்டு இல்லற வாழ்க்கையில் இணைகிறார்.

வரும் நவம்பர் மாதம் கங்கை நதி ஓரம் அமைந்துள்ள ரிஷிகேஷில் திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பபட்டுள்ளது.

அவ்வப்போது ரசிகர்களின் மனதை சமூக வலைளதம் மூலமாக கிறக்கடித்து வந்த ரம்யா பாண்டியனுக்கு திருமணம் என்ற செய்தி கசக்கத்தான் செய்யும்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!