3 வருஷமா அது நடந்துச்சு.. காதல் குறித்து ரகசியம் பகிர்ந்த ரம்யா பாண்டியன்..!

Author: Vignesh
18 October 2023, 9:39 am

ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார், குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.அதன் பின் ஆண் தேவதை போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

மக்களிடையே பெரிய வரவேற்பையும் ஆதரவும் பெற்றது அந்நிகழ்ச்சி. ரம்யா பாண்டியனை சினிமா மூலம் தெரிந்தவர்களை விட கூட ‘ குக் வித் கோமாளி’ மூலம் தெரிந்தவர்களே அதிகம். குறிப்பாக அந்நிகழ்ச்சியில் ரம்யாபாண்டியன் புகழுடன் இணைந்து செய்த சேட்டைகளும் , காமெடிகளும் மக்களை பெரிதும் கவர்ந்தது .விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமளி’ இறுதிச் சுவற்றில் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவுபெற அதன் பின் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட வாய்ப்புகள் வர தொடங்கின.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் தன்னுடைய கல்லூரியில் படிக்கும் போது தன்னை ஒருவர் பேருந்து நிலையத்தில் நின்று பார்த்துக் கொண்டே இருந்தாலர் அவர் தன் கல்லூரியை விட்டு திரும்பி வரும்போது அங்கேயே இருப்பார். மூன்று வருடம் தன்னை பாலோ செய்தார். ஒரு நாள் என்னிடம் ப்ரபோஸ் செய்து விட்டார். அதுக்கு நான் நோ சொல்லிவிட்டேன் என்று ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

  • murali love actress sivaranjani but she did not accept him மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?