ரிஸ்க் எடுக்கிறதுலாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி.. ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்த ரம்யா பாண்டியன்..!

Author: Vignesh
15 June 2023, 5:30 pm

ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார், குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.அதன் பின் ஆண் தேவதை போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

மக்களிடையே பெரிய வரவேற்பையும் ஆதரவும் பெற்றது அந்நிகழ்ச்சி. ரம்யா பாண்டியனை சினிமா மூலம் தெரிந்தவர்களை விட கூட ‘ குக் வித் கோமாளி’ மூலம் தெரிந்தவர்களே அதிகம். குறிப்பாக அந்நிகழ்ச்சியில் ரம்யாபாண்டியன் புகழுடன் இணைந்து செய்த சேட்டைகளும் , காமெடிகளும் மக்களை பெரிதும் கவர்ந்தது .விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமளி’ இறுதிச் சுவற்றில் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவுபெற அதன் பின் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட வாய்ப்புகள் வர தொடங்கின.

இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் தற்போது வில் போன்று உடலை வளைத்து தலைகீழாக யோகா செய்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் ஷாக்கிங் ரியாக்சன் கொடுத்து வருகிறார்கள். மேலும் பலர் ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் ரம்யா பாண்டியனுக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!