திருமணம் குறித்து முதல் முறையாக ஓப்பனாக பேசிய ரம்யா பாண்டியன்.. என்ன இப்படி சொல்லிட்டாங்க..!

Author: Vignesh
17 June 2023, 1:45 pm

ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார், குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.அதன் பின் ஆண் தேவதை போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

மக்களிடையே பெரிய வரவேற்பையும் ஆதரவும் பெற்றது அந்நிகழ்ச்சி. ரம்யா பாண்டியனை சினிமா மூலம் தெரிந்தவர்களை விட கூட ‘ குக் வித் கோமாளி’ மூலம் தெரிந்தவர்களே அதிகம். குறிப்பாக அந்நிகழ்ச்சியில் ரம்யாபாண்டியன் புகழுடன் இணைந்து செய்த சேட்டைகளும் , காமெடிகளும் மக்களை பெரிதும் கவர்ந்தது .விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமளி’ இறுதிச் சுவற்றில் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவுபெற அதன் பின் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட வாய்ப்புகள் வர தொடங்கின.

இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் தற்போது அளித்திருக்கும் பேட்டியில், திருமணம் குறித்து பேசி இருக்கிறார். அதாவது தன் நிச்சயம் காதல் திருமணம் தான் செய்வேன் என்றும், இப்போது தன் வாழ்க்கையில் யாரும் இல்லை எனவும், தான் சிங்கிள் தான் என்றும், ஒருவரை தனக்கு பிடிக்க வேண்டும் என்றால் அவரது பர்சனாலிட்டியை வைத்து தான் பிடிக்கும் என்றும், அவருடைய கண்கள் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும், ரம்யா பாண்டியன் திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!