தல அஜித்துக்கு ஸ்போர்ட்ஸ் அகாடமி திறப்பதே குறிக்கோள்: ரங்கராஜ் பாண்டே!

26 February 2021, 5:34 pm
Quick Share

தல அஜித் ஸ்போர்ட்ஸ் அகாடமி திறப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளார் என்று ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்பவில்லை. படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கூட அவர் கலந்து கொள்வதில்லை. ஆனால், உதவி என்று வருபவர்களுக்கு ஒரு போதும் இல்லை என்று சொல்வதில்லை. படங்களில் நடிப்பதைத் தவிர தல அஜித் பைக் ரேஸ், சைக்கிளிங், துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் மட்டுமே காண முடியும். கடந்த 15 ஆம் தேதியுடன் வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், தனது நண்பர்களுடன் இணைந்து கிட்டத்தட்ட 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிளிங் செய்துள்ளார்.

அப்போதெல்லாம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. சமீபத்தில் சென்னையிலிருந்து சிக்கிம் பகுதிக்கு கிட்டத்தட்ட 5000 கிமீ தூரம் வரை பைக்கில் பயணம் செய்துள்ளார். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் தல அஜித் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருந்து வருகிறார். இந்த நிலையில், இவர் குறித்த முக்கியமான தகவலை அவருடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த நடிகர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

அதாவது, திரு அஜித் தன்னுடைய எதிர்கால கனவாக அடுத்தகட்ட நகர்வாக தீர்மானித்திருப்பது ஒட்டுமொத்த உலகமும், இந்தியாவும், தமிழகமும், வியக்கும் வகையில், போற்றும் விதமாக ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமி பண்ணனும். இந்திய தமிழக இளைஞர்கள் பயன் பெறக்கூடிய வகையில், ஒரு ஆச்சரியமான வேர்ல்டு கிளாஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி பண்ண வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் குமார் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்னும், பைக் ஸ்டண்ட் காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட உள்ளது. அதுவும், ஸ்பெயின் நாட்டில் தான் அந்த பைக் ஸ்டண்ட் காட்சிகள் எடுக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் தல அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நேர்கொண்ட பார்வை பட த்தை இயக்கிய இயக்குநர் ஹெச் வினோத் இந்தப் பட த்தையும் இயக்கியுள்ளார். போனி கபூர் இந்தப் பட த்தை தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஓடிடி தளத்தில் வலிமை பட த்தை வெளியிட படக்குழுவினருடன் அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0